இதே கேள்வியை ஆண் கிரிக்கெட்டரை பார்த்து கேட்பீங்களா? நிருபரின் வாயை அடைத்த மிதாலி ராஜ்! சானியா மிர்ஸா வரவேற்பு

Published : Jun 09, 2022, 05:47 PM IST
இதே கேள்வியை ஆண் கிரிக்கெட்டரை பார்த்து கேட்பீங்களா? நிருபரின் வாயை அடைத்த மிதாலி ராஜ்! சானியா மிர்ஸா வரவேற்பு

சுருக்கம்

நிருபரின் கேள்விக்கு அவரது மூக்கை உடைக்கும்படியான பதிலை கொடுத்தார் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். மிதாலி ராஜின் கருத்துக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை மிதாலி ராஜ். 1999ம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஆடிவந்த மிதாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள், 89 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 699, 7805, 2364 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். 

23 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி, மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்த மிதாலி ராஜ், நேற்று(ஜூன்8) அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த மிதாலி ராஜிடம், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த மிதாலி ராஜ், இதே கேள்வியை கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களா..? உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீராங்கனை பிடிக்கும் என்று கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களா? என்று மிதாலி ராஜ் கேட்க, வாயடைத்துப்போய் மறுவார்த்தை பேசவில்லை அந்த நிருபர்.
 
ஆடவர் கிரிக்கெட் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் கிரிக்கெட்டுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில்லை. மகளிர் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களும் குறைவுதான். அந்த ஆதங்கம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உண்டு. அப்படியிருக்கையில், அந்த நிருபரின் கேள்வி, மிதாலி ராஜுக்கு கோபத்தை வரவழைத்துவிட்டது. அதன்விளைவாகத்தான், அவர் இப்படியொரு ரிப்ளை அளித்தார்.

நிருபரின் கேள்விக்கு மிதாலி ராஜ் அளித்த பதிலுக்கு வரவேற்பும் ஆதரவும் அளித்து பாராட்டி டுவீட் செய்துள்ளார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!