ENG vs NZ: 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் இதுதான்.! இங்கிலாந்து அணி அதிரடி அறிவிப்பு

Published : Jun 09, 2022, 03:45 PM IST
ENG vs NZ: 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் இதுதான்.! இங்கிலாந்து அணி அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. லண்டன்ன் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

2வது டெஸ்ட் போட்டி நாளை(ஜூன்10) நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்துவந்த இங்கிலாந்து அணி புதிய கேப்டனான பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில், நியூசிலாந்துக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், 2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் சாம்பியனான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, முதல் டெஸ்ட்டில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது. 

எனவே நாட்டிங்காமில் நடக்கும் 2வது டெஸ்ட் மிகக்கடுமையான போட்டியாக இருக்கும். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது. அந்த அணியின் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:

ஜாக் க்ராவ்லி, அலெக்ஸ் லீஸ், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மேத்யூ பார்கின்சன்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!