டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு! இளம் வீரருக்கு வாய்ப்பு.. காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்

Published : Sep 06, 2022, 03:47 PM IST
டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு! இளம் வீரருக்கு வாய்ப்பு.. காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிவருகின்றன. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையாக இருக்கும். 

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ராசி வாண்டர் டசன் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. இது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இளம் வீரரான டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிங்க - Asia Cup: மருத்துவமனையில் ரிஸ்வான்.. பாகிஸ்தானுக்கு பாதிப்பு

டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, வெய்ன் பார்னெல், ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரிலீ ரூசோ, டப்ரைஸ் ஷம்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

ரிசர்வ் வீரர்கள் - ஃபார்ச்சூன், மார்கோ யான்சென், ஆண்டில் ஃபெலுக்வாயோ.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!