#SLvsSA டி காக் அதிரடி அரைசதம்.. 2வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

Published : Sep 13, 2021, 05:27 PM IST
#SLvsSA டி காக் அதிரடி அரைசதம்.. 2வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, 2-0 என டி20 தொடரை வென்றது.  

தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இலங்கை அணி வென்றது. இதையடுத்து டி20 தொடர் நடந்துவருகிறது.

முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா மட்டும் ஓரளவிற்கு நன்றாக ஆடி 30 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு எந்த இலங்கை வீரருமே சரியாக ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி வெறும் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷாம்ஸி மற்றும் மார்க்ரம் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

104 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்கும் ரீஸா ஹென்ரிக்ஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். ஹென்ரிக்ஸ் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக அடித்து ஆடிய குயிண்டன் டி காக் அரைசதம் அடித்தார். 

டி காக்குடன் இணைந்து மார்க்ரம் நன்றாக ஆட, 15வது ஓவரில் இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-0 என டி20 தொடரை வென்றது. சிறப்பாக ஆடிய டி காக் 48 பந்தில் 58 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற செய்தார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்