இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஷுப்மன் கில்

Published : May 15, 2021, 10:16 PM IST
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஷுப்மன் கில்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  

இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, ஐபிஎல் 14வது சீசன் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வரும் ஜூன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடும் இந்திய அணி, அதைத்தொடர்ந்து இங்கிலாந்திலேயே இருந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடவுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ளதையடுத்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், இளம் வீரர் ஷுப்மன் கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதை டுவிட்டரில் தெரிவித்த ஷுப்மன் கில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? தோனியின் ஓய்வு குறித்து வெளியான அதிரடித் தகவல்! ஐபிஎல் 2026 மெகா ஏலம் அப்டேட்!!
எதிரணிகளை அலற விடும் யார்க்கர் கிங்.. டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை!