சிஎஸ்கே அணியின் ஒரே பிரச்னை இதுதான்..!

By karthikeyan VFirst Published May 15, 2021, 9:22 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் ஒரே பிரச்னை என்னவென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று. 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் தான் முதல் முறையாக பிளே ஆஃபிற்குக்கூட செல்லாமல் லீக் சுற்றில் வெளியேறியது. ஆனால் அப்படி ஒரு சீசனே நடக்கவில்லை எனுமளவிற்கு இந்த சீசனில் அபாரமாக ஆடியது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே அணி வழக்கம்போலவே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி இந்த சீசனில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றது. ஆனால், சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரு பிரச்னையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணியின் ஒரே பிரச்னை டெத் பவுலிங் தான். டெத் ஓவர்களில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர் சிஎஸ்கே அணியில் இல்லை. அதைத்தவிர சிஎஸ்கே அணியில் நெகட்டிவ் என்று சொல்ல எதுவுமே இல்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டெத் ஓவர்களில் ஸ்லோ யார்க்கர்கள், ஸ்லோ டெலிவரிகளை வீசக்கூடிய பிராவோ மட்டுமே சிஎஸ்கே அணியில் நம்பிக்கையளிக்கிறார். தீபக் சாஹர் பவர்ப்ளேயில் வீசக்கூடிய பவுலர். ஷர்துல் தாகூர், லுங்கி இங்கிடி ஆகியோர் நல்ல டெத் பவுலர்கள் கிடையாது என்பதால் ஆகாஷ் சோப்ரா சரியான கருத்தைத்தான் கூறியிருக்கிறார்.

click me!