GT vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் ஐபிஎல் கோப்பையை கண்டிப்பாக ஜெயிக்கணும்..? ஷோயப் அக்தர் அதிரடி

Published : May 29, 2022, 08:38 PM IST
GT vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் ஐபிஎல் கோப்பையை கண்டிப்பாக ஜெயிக்கணும்..? ஷோயப் அக்தர் அதிரடி

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலில் ஏன் கண்டிப்பாக ஜெயித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ் தான். ஷேன் வார்ன் தலைமையில் முதல் ஐபிஎல் டைட்டிலை வென்றது ராஜஸ்தான் அணி. ஷேன் வார்ன் அண்மையில் தான் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த முதல் சீசனில் கோப்பையை வென்றதற்கு பின், 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சீசனில் தான் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.

ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடிவருகிறது. இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக விளையாடி, சஞ்சு சாம்சன் தலைமையில் அசத்திவருகிறது.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் ஃபைனலில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ஷேன் வார்ன் இறந்த இதே ஆண்டில் ராஜஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில், அவருக்காகவே ஐபிஎல் டைட்டிலை அந்த அணி வெல்ல வேண்டும் என்று முன்னாள் வீரர்களும், ராஜஸ்தான் அணியும் நினைக்கிறது.

இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஷேன் வார்னுக்காக ராஜஸ்தான் அணி களத்தில் இறங்கி அடித்து நொறுக்கி கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்று அக்தர் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..