இந்திய பவுலர்களே கால் பண்ணி அட்வைஸ் கேட்குறாங்க.. உங்களுக்கு என்னடா கேடு..? சொந்த நாட்டு வீரர்களை தெறிக்கவிட்ட அக்தர்

By karthikeyan VFirst Published Oct 8, 2019, 5:05 PM IST
Highlights

எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட அணி என்றால் அது பாகிஸ்தான் அணிதான். பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அதிவேகத்தில் அபாரமாக வீசக்கூடியவர்கள். 
 

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி என அபாரமான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்டு எதிரணிகளை தெறிக்கவிட்ட அணி பாகிஸ்தான். தற்போது முகமது ஆமீர், வஹாப் ரியாஸ், ஜூனைத் கான் ஆகியோர் உள்ளனர். ஆனாலும் இளம் பவுலர்கள் அவ்வளவு சிறப்பானவர்களாக இல்லை. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடிவரும் பாகிஸ்தான் அணி, டி20 தொடரை இலங்கையிடம் தோற்று மரண அடி வாங்கியுள்ளது. இது அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளித்துள்ளது. 

முதல் டி20 போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 182 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் மிகவும் சாதாரணமாக இருந்தது. அவர்களது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டலோ, எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் தன்மையோ சுத்தமாக இல்லை. 

இந்நிலையில், சொந்த நாட்டு ஃபாஸ்ட் பவுலர்களை கடுமையாக தாக்கி பேசியுள்ள அக்தர், அவர்கள் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய அக்தர், இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் எனக்கு போன் செய்து ஃபாஸ்ட் பவுலிங் குறித்த ஆலோசனைகளை கேட்டு பெறுகிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் கால் பண்ணி ஆலோசனைகளை பெறுகிறார்கள். அவர்களே ஆலோசனை கேட்கும்போது சொந்த நாட்டு பவுலர்கள் ஒருமுறை கூட தொடர்புகொண்டு ஆலோசனை கேட்காதது வருத்தமாக இருக்கிறது. 

பவுலிங் வேகத்தை எப்படி அதிகரிப்பது, ஆர்ம் ஸ்பீடை உயர்த்துவது எப்படி, ரன் அப் ஆகியவை குறித்த அட்வைஸ்களை ஒருவர் கூட இதுவரை என்னை தொடர்புகொண்டு கேட்டதில்லை. நசீம் ஷா, முசா கான், ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட இளம் வீரர்களை, உலகின் ஃபாஸ்ட் பவுலர்களாக என்னால் மாற்றிக்காட்ட முடியும். அவர்கள் எல்லாம் என்னிடம் வந்து ஆலோசனை கேட்க வேண்டும். அப்படி கேட்டால் அவர்களை மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களாக மாற்றிவிடுவேன் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 
 

click me!