என் கெரியரில் என்னால் அவுட்டாக்க முடியாத ஒரே வீரர் அவருதான்..! ஷோயப் அக்தர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

By karthikeyan VFirst Published May 28, 2020, 9:04 PM IST
Highlights

மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரான ஷோயப் அக்தர், தனது கெரியரில் தன்னால் அவுட்டாக்க முடியாத பேட்ஸ்மேன் யார் என்று தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர். 

தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ் ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டியவர் அக்தர். 

அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அவர் தனது கெரியரில் யாரை அவுட்டாக்கியதில்லை என்று தெரிவித்துள்ளார். 

சஞ்சய் மஞ்சரேக்கருடனான உரையாடலில் இதுகுறித்து பேசிய அக்தர், இன்சமாம் உல் ஹக்கைத்தான் நான் அவுட்டாக்கியதில்லை. அவரை வலைப்பயிற்சியில் நான் வீழ்த்தியதாக எனக்கு நினைவே இல்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் நான் வீசும் பந்தை பார்க்கும் டைமிங்கில், மற்றவர்களை விட ஒரு நொடிக்கு முன்பே இன்சமாம் பார்த்துவிடுவார். அதனால் எளிதாக ஆடுவார். எனவே என்னால் இன்சமாமை வலைப்பயிற்சியில் வீழ்த்தவே முடியவில்லை என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக், சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். பாகிஸ்தான் அணிக்காக 120 டெஸ்ட், 378 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தம் 20,569 ரன்களை குவித்துள்ளார். 
 

click me!