யுவராஜ் சிங்கின் முதுகை உடைத்தேன்.. வேறொருவருக்கு இடுப்பு..! அக்தர் அதிரடி.. திரைமறைவு சம்பவங்கள்

By karthikeyan VFirst Published Aug 7, 2020, 3:54 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், தனக்கு நெருக்கமானவர்களிடம் தான் பழகும் விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர். 

தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டியவர் அக்தர்.  அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே அனல் பறக்கும். அதிலும் அக்தர் ஆடிய காலக்கட்டத்தில் எல்லாம், மோதல் ஆட்டரீதியாகவும் சரி, தனிப்பட்ட ரீதியாகவும் சரி, கடுமையாக இருக்கும். ராகுல் டிராவிட், சேவாக், ஹர்பஜன் சிங் ஆகிய இந்திய வீரர்களுடனான அக்தரின் மோதல் மிக பிரபலமானவை. 

களத்தில் என்னதான் கடும் மோதல்கள் இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நல்ல உறவும் இருந்தது. அந்தவகையில், இந்திய வீரர்களுடன் நல்லுறவை பேணும் பாகிஸ்தான் வீரர்களில் முக்கியமானவர் ஷோயப் அக்தர். பவுலிங்க்

அந்தவகையில், தனது அதிவேக பவுலிங்கின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிய அக்தர், தனக்கு நெருக்கமானவர்களிடம் தனது அன்பையும் முரட்டுத்தனமாக காட்டுவதாக அக்தர் மனம் திறந்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பிபிசி தூஸ்ரா பாட்கேஸ்ட்டில் பேசிய ஷோயப் அக்தர், எனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் மல்லுக்கட்டுவேன். அது எனது பழக்கம். அப்படி ஒருமுறை யுவராஜுடன் மல்லுக்கட்டி அவரது முதுகை உடைத்துவிட்டேன். அஃப்ரியின் இடுப்பு, அப்துல் ரசாக்கின் தொடை  ஆகியவற்றையும் உடைத்திருக்கிறேன். நான் அன்பை வெளிப்படுத்தும் விதம் முரட்டுத்தனமாக இருக்கும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

click me!