நான் பந்துவீசியதிலேயே ரொம்ப துணிச்சலான பேட்ஸ்மேன் அவருதான்! சச்சின், சேவாக், டிராவிட்லாம் இல்ல.. அக்தர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 11, 2020, 7:46 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் முன்னாள் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான ஷோயப் அக்தர், தனது கெரியரில் தான் பந்துவீசியதிலேயே துணிச்சலான பேட்ஸ்மேன் யார் என்று தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர். 

தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டியவர் அக்தர். 

அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள அக்தர், தனது கெரியரில் தான் பந்துவீசியதிலேயே துணிச்சலான பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி தான் என்று தெரிவித்துள்ளார். 

ஹெலோ ஆப்பில் பேசிய ஷோயப் அக்தர், கங்குலி எனது பவுலிங்கை எதிர்கொள்ள பயப்பட்டார் என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. நான் பந்துவீசியதிலேயே மிக துணிச்சலான பேட்ஸ்மேன் கங்குலி தான். கங்குலி அனைத்து விதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் அல்ல. அதனால் அவரது நெஞ்சை தாக்கும் நோக்கில், வேண்டுமென்றே நெஞ்சை குறிவைத்து வீசியிருக்கிறேன். ஆனால் துணிச்சலுடன் எனது பவுலிங்கை எதிர்கொண்டு அதிகமான ரன்களை குவித்தவர் கங்குலி. இந்தியாவின் துணிச்சலான கேப்டனும் கங்குலி தான். கங்குலி கேப்டனாவதற்கு முன், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள திணறும். பாகிஸ்தானை வீழ்த்த முடியாமல் தவித்த இந்திய அணி, கங்குலி கேப்டனான பிறகு தான், பாகிஸ்தானை அதிகமாக வீழ்த்தியது என்று கங்குலியின் துணிச்சலை புகழ்ந்து பேசியுள்ளார் அக்தர்.
 

click me!