நாங்க பரவாயில்ல போலவே.. இந்திய அணியை பார்த்து ஏளனமா சிரிக்கும் அக்தர்

By karthikeyan VFirst Published Dec 19, 2020, 9:34 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை கண்டு மனதுக்குள் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஷோயப் அக்தர்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியை 191 ரன்களுக்கு சுருட்டி, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையில், 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒரு வீரர் இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை. புஜாரா, ரஹானே, அஷ்வின் ஆகிய மூவரும் டக் அவுட்டானார்கள். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதால், 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி நிர்ணயித்த 90 ரன்கள் என்ற இலக்கை ஆஸி., அணி எளிதாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இந்த இன்னிங்ஸில் அடித்த 36 ரன்கள் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் படுமோசமான பேட்டிங் இதுதான்.

இந்திய அணியின் மோசமான பேட்டிங் குறித்து பேசிய ஷோயப் அக்தர், முந்தைய நாள் இரவு நான் மேட்ச் பார்க்கவில்லை. காலை எழுந்து டிவியை போட்டதும், இந்திய அணி 369 ரன்கள் அடித்துவிட்டது என்று நினைத்தேன். பின்னர் கண்ணை துடைத்துவிட்டு, உற்று கவனித்த பிறகுதான், 36 ரன்களுக்கு 9 விக்கெட் என்பதை பார்த்தேன். இந்திய அணிக்கு மோசமான தோல்வி இது. மோசமான பேட்டிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எங்களது குறைவான ஸ்கோர் ரெக்கார்டை இந்திய அணி தகர்த்துவிட்டது. நாங்கள்(பாகிஸ்தான்) ஆஸி.,க்கு எதிராக 53 ரன்களுக்கு ஆல் அவுட்டானபோது, ஷேன் வார்ன், மெக்ராத், பிரெட் லீ ஆகிய ஜாம்பவான் பவுலர்களை எதிர்கொண்டோம் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

click me!