அவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க..! யூனிஸ் கானை விளாசிய அக்தர்

By karthikeyan VFirst Published Jul 3, 2020, 7:27 PM IST
Highlights

ஆர்ச்சருக்கு யூனிஸ் கான் கொடுத்த பில்டப் தேவையில்லாதது என்பது ஷோயப் அக்தரின் கருத்து. 
 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மூன்றரை மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும், இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

மிகக்கடினமான இங்கிலாந்து கண்டிஷனில் பாகிஸ்தான் வீரர்களுக்கு சரியான ஆலோசனையை வழங்கி அவர்களை சிறப்பாக வழிநடத்துவதற்காக, முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனும் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடிய ரெக்கார்டை கொண்ட பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுமான யூனிஸ் கான், இந்த தொடருக்கான பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன் அந்த தொடர் குறித்து பேசிய யூனிஸ் கான், இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பாகிஸ்தான் வீரர்களுக்கு சவாலாக இருப்பார் என்று யூனிஸ் கான் கருத்து தெரிவித்திருந்தார். 

ஆர்ச்சர் குறித்து பேசிய யூனிஸ் கான், ஆர்ச்சர் உண்மையான மேட்ச் வின்னர் மற்றும் அச்சுறுத்தலும் கூட. ஆர்ச்சர் மிகச்சிறந்த பவுலர். உலக கோப்பை இறுதி போட்டியின் சூப்பர் ஓவரை அருமையாக வீசினார். அவரது பவுலிங் ஆக்‌ஷன் மிகச்சிறப்பு; மிரட்டலான வேகத்தில் வீசக்கூடியவர். சிறந்த பவுலர் என்ற பிம்பத்தினாலும், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதும், ஆர்ச்சர் மீதான கூடுதல் அழுத்தங்கள். அதனால் அவருக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். அவரது இன்ஸ்விங்கில் அவுட்டாகிவிடாமல் தப்பிப்பதற்கான ஆலோசனைகளை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கியிருக்கிறேன் என்று யூனிஸ் கான் தெரிவித்தார். 

இந்நிலையில், யூனிஸ் கானின் கருத்து குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆர்ச்சரின் பவுலிங் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் யூனிஸ் கான் கூறியிருக்கிறார். ஆனால் என்னை பொறுத்தமட்டில், ஆர்ச்சரை பார்த்து பயப்பட தேவையில்லை. ஆர்ச்சரின் பவுலிங்கை தடுத்து ஆட வேண்டும் என்று வீரர்களுக்கு யூனிஸ் கான் கூறினாரா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால், கண்டிப்பாக அதை செய்யக்கூடாது என்று அக்தர் கூறியிருக்கிறார். 

ஆர்ச்சருக்கு அவ்வளவு சீன்லாம் இல்ல.. நம்ம ஆளுங்க அடிச்சே ஆடுவாங்க என்கிற ரீதியில் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் வளர்ந்துவரும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சர். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிரட்டலாக வீசினார். குறிப்பாக இவரது பவுன்ஸரில் இருந்து பேட்ஸ்மேன்கள் தங்களை காத்துக்கொள்வது அவசியம். அதுவும் இங்கிலாந்து கண்டிஷனில் ஆர்ச்சர் மேலும் மிரட்டலாக வீசக்கூடியவர். இதை ஆஷஸ் தொடரிலேயே பார்த்திருக்கிறோம். அதனால் தான் யூனிஸ் கான் ஆர்ச்சரை உயர்த்தி மதிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!