டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2வது இந்திய வீரர்.. உத்தப்பாவுடன் சாதனை பட்டியலில் இணைந்த ஷிவம் துபே

By karthikeyan VFirst Published Dec 9, 2019, 2:17 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், முதன்முறையாக பேட்டிங் ஆடிய ஷிவம் துபே, அறிமுக இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். 
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடருக்கான அணியில் ஷிவம் துபே எடுக்கப்பட்டார். ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் பேட்டிங் ஆட துபேவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில், தொடக்க வீரர் ராகுல் அவுட்டானதும், மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டார் ஷிவம் துபே. கேப்டன் கோலியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் ஷிவம் துபே.

களத்திற்கு வந்த ஆரம்பத்தில் ஷாட்டுகள் சரியாக கனெக்ட் ஆகாமலும் டைமிங் இல்லாமலும் திணறினார். அதன்பின்னர் களத்தில் நிலைத்த பிறகு, அபாரமான ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்தார். முதல் 15 பந்தில் தடுமாறிய ஷிவம் துபே, அடுத்த 15 பந்தில் வேற லெவலில் ஆடினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை வெளுத்து வாங்கிய ஷிவம் துபே, 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

ஷிவம் துபேவின் அதிரடியான பேட்டிங்கால்தான் இந்திய அணி 170 ரன்களையே எட்டியது. இல்லையெனில் இதைக்கூட எட்டியிருக்க முடியாது. அறிமுக இன்னிங்ஸிலேயே, அதுவும் விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரில் இறங்கி அரைசதம் அடித்து அசத்தினார் ஷிவம் துபே. இதன்மூலம் அறிமுக டி20 இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

ஏற்கனவே 2007ல் உத்தப்பா, தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்து அந்த பட்டியலில் ஷிவம் துபே இணைந்துள்ளார். 
 

click me!