இங்க அடிக்கிறதுலாம் இருக்கட்டும்.. நியூசிலாந்துல அவரோட லெட்சணம் தெரிஞ்சுடும்.. ரோஹித் சர்மாவை தெறிக்கவிடும் முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Oct 4, 2019, 10:16 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பெரிதும் எதிர்பார்ப்பக்கப்பட்ட ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார். 
 

கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக தொடர்ச்சியாக சொதப்பியதை அடுத்து, அவர் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தொடக்க வீரராக ஆடுகிறார். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக பல சாதனைகளை குவித்துள்ள ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்குவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அனைவரின் பார்வையும் கவனமும் ரோஹித் மீதே இருந்தன. 

இது ரோஹித்துக்கு ஒருவகையில் கடும் நெருக்கடியும் கூட. டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய ரோஹித் சர்மா, நெருக்கடியை எல்லாம் மண்டைக்கு ஏற்றாமல் அபாரமாக ஆடினார். தனது இயல்பான ஆட்டத்தை மிக கவனமாகவும் தெளிவாகவும் ஆடினார். தொடக்க வீரராக இறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்த ரோஹித், இரட்டை சதத்தை நோக்கி பயணப்பட்டார். ஆனால் மிகவும் அசால்ட்டாக ஸ்டம்பிங் ஆகி 176 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சத வாய்ப்பை தவறவிட்டார். 

ரோஹித் சர்மாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பெரிதாக பந்துகளை வீணடிக்காமல், ஸ்கோர் செய்தார். 244 பந்துகளில் 176 ரன்கள் அடித்தார். ரபாடா, ஃபிளாண்டர், கேசவ் மஹராஜ் ஆகியோரின் பவுலிங் ரோஹித்தை எந்தவகையிலும் அச்சுறுத்தவில்லை. மிகவும் நேர்த்தியாக ஆடி ஸ்கோர் செய்தார். ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வாலின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 502 ரன்களை குவித்தது. 

பெரும் எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் மத்தியில் தொடக்க வீரராக இறங்கி ஜொலித்தார் ரோஹித். இதன்மூலம் இன்னும் சில ஆண்டுகளுக்கு அவர் தான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. ரோஹித் சர்மா என்னதான் சிறப்பாக ஆடி சதமடித்திருந்தாலும், இந்தியாவில் ஆடுவதை மட்டும் கருத்தில்கொண்டு, ரோஹித் டெஸ்ட் போட்டியில் ஜொலிப்பார் என்று சொல்லிவிடமுடியாது என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஷான் போலாக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஷான் போலாக், இந்தியாவில் ஆடுவதை வைத்து ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கெரியரை மதிப்பிட முடியாது. அவர் இதற்கு முன்னும் இந்தியாவில் சிறப்பாகவே ஆடியுள்ளார். இப்போதும் சிறப்பாகவே ஆடிவருகிறார். ஆனால் இந்தியாவிற்கு வெளியே தான் அவருக்கு சவால்கள் காத்திருக்கின்றன. வெளிநாடுகளில் சிறப்பாக ஆடித்தான், அவர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். நியூசிலாந்தில் ரோஹித் சர்மா என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என ஷான் போலாக் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. அதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஆடுகிறது. அதுதான் இந்தியாவின் அடுத்த வெளிநாட்டுத்தொடர் என்பதால் அதை குறிப்பிட்டுள்ளார் ஷான் போலாக். 

click me!