சாஹல் - சாஹர் 2 பேரில் யார்..? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்குத்தான் இடம்

Published : May 08, 2022, 09:08 PM IST
சாஹல் - சாஹர் 2 பேரில் யார்..? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்குத்தான் இடம்

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹல் - சாஹர் ஆகிய இருவரில் யாரை எடுக்கலாம் என்று ஷான் பொல்லாக் கருத்து கூறியுள்ளார்.  

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் ஆடவுள்ள இந்திய அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க, ஐபிஎல்லை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் விதமாக நிறைய வீரர்கள் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னருக்கான இடத்தை பிடிக்க சாஹல் - சாஹர் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹர் தான் அணியில் எடுக்கப்பட்டார். ஃபார்மில் இல்லாததால் சாஹல் தூக்கி எறியப்பட்டார். 

ஆனால் மீண்டும் ஃபார்முக்கு வந்து பவுலிங்கில் பட்டைய கிளப்பிவருகிறார் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல்லில் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவரும் சாஹல் இதுவரை 10 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் சாஹர் 10 போட்டிகளில் 12 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவர்களில் இருவரில் யாரை எடுக்கலாம் என்பது குறித்து பேசிய தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஷான் பொல்லாக், சந்தேகமே இல்லை.. கண்டிப்பாக சாஹல் தான்.. ஃபார்முக்கு திரும்பி அசத்திவருகிறார். அருமையாக பந்துவீசிவரும் சாஹல் தான் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கப்பட வேண்டும் என்று பொல்லாக் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
ICC Rankings: ஐசிசி தரவரிசையில் மாஸ் காட்டிய கில்... பும்ராவின் No.1 இடத்துக்கு வந்த நியூசி. வீரர்!