CSK vs DC: டாஸ் ரிப்போர்ட்.. டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள்! சிஎஸ்கே அணியில் ஜடேஜா இல்லை

Published : May 08, 2022, 07:20 PM ISTUpdated : May 08, 2022, 07:23 PM IST
CSK vs DC: டாஸ் ரிப்போர்ட்.. டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள்! சிஎஸ்கே அணியில் ஜடேஜா இல்லை

சுருக்கம்

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில்  சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறுவது டெல்லி கேபிடள்ஸுக்கு முக்கியம். ஆனால் சிஎஸ்கேவிற்கு அப்படியில்லை. ஏனெனில் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணியைவிட, பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ள டெல்லி அணிக்குத்தான் இது முக்கியமான போட்டி.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லிகேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான டெல்லி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மந்தீப் சிங்கிற்கு பதிலாக ஸ்ரீகர் பரத்தும், லலித் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்ஸர் படேலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், ஸ்ரீகர் பரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், அன்ரிக் நோர்க்யா, குல்தீப் யாதவ், கலீல் அகமது.

சிஎஸ்கே அணியில் ஃபிட்னெஸ் இல்லாத காரணத்தால் ஜடேஜா ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். ப்ரிட்டோரியஸுக்கு பதிலாக மீண்டும் பிராவோ களமிறங்கியுள்ளார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ட்வைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!