பந்தை "turn" செய்யாமல் விக்கெட்டுகளை வாரிக்குவித்த கும்ப்ளே.. சூட்சமத்தை சொன்ன ஷேன் வார்ன்

By karthikeyan VFirst Published Apr 1, 2020, 5:24 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஸ்பின்னர் அனில் கும்ப்ளே. இந்திய அணியில் 15 ஆண்டுகள் ஆடிய கும்ப்ளே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்.
 

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன்(800), ஷேன் வார்ன்(708) ஆகிய இருவருக்கு அடுத்த இடத்தில் 619 விக்கெட்டுகளுடன் உள்ளார் அனில் கும்ப்ளே.

ரிஸ்ட் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே, முரளிதரனை போலவோ ஷேன் வார்னை போலவோ பந்தை சுழற்றவோ, டர்ன் செய்யவோ மாட்டார். ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சுமார் 15 ஆண்டுகள் ஆடிய கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார்.

கொரோனாவால் உலகமே வீட்டில் முடங்கியுள்ள இந்த சூழலில், ரசிகர்களுடன் உரையாடிவரும் ஷேன் வார்ன், பந்தை சுழற்றவே செய்யாமல் அதிகமான விக்கெட்டுகளை கும்ப்ளேவால் எப்படி வீழ்த்த முடிந்தது என்பதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே பந்தை சுழற்றிவிட்டு, திரும்பச்செய்யமாட்டார். ஆனாலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை வாரிக்குவித்தார். அதற்கு காரணம், அவரது பவுலிங்கில் நல்ல பவுன்ஸ் இருக்கும். அந்த திறமையை பயன்படுத்தி கொண்ட அவர், தனது பலமறிந்து அதன்படி செயல்பட்டார். அவர் சூப்பர் போட்டியாளர். நல்ல மூளைக்காரர்; ஜெண்டில்மேன். மிகவும் அமைதியாகவே இருப்பார். ஆனால் கடுமையான போட்டியாளர். விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்டவர் என்று ஷேன் வார்ன், அனில் கும்ப்ளேவை புகழ்ந்து தள்ளியுள்ளார். 
 

click me!