டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றுலயே 3வது இந்திய பவுலர் ஷமி தான்.. தரமான சாதனை

By karthikeyan VFirst Published Nov 17, 2019, 5:17 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபாஸ்ட் பவுலர் ஷமி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் சிறந்து விளங்குவதற்கும், நமது ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கண்டு எதிரணி வீரர்கள் தெறிப்பதற்கும் முக்கியமான காரணங்களில் ஒருவர் ஷமி.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசிவருகிறார். அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வாரிக்குவிக்கிறார். 2018ம் ஆண்டு முதல் தற்போதுவரை, இரண்டாவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஷமி தான். 

அதேபோல 2018லிருந்து தற்போது வரை இரண்டாவது இன்னிங்ஸில் அதிகமான 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதும் ஷமி தான். அதனாலேயே இரண்டாம் இன்னிங்ஸின் நாயகன் என அழைக்கப்படுகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி. 

தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக பந்துவீசிவருவதன் விளைவாக, டெஸ்ட் தரவரிசையில் தனது கெரியரில் சிறப்பான இடமான 7ம் இடத்தை பிடித்துள்ளார். 790 புள்ளிகளுடன் டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 7ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த 790 புள்ளிகள் என்பது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய ஃபாஸ்ட் பவுலர் பெறும் மூன்றாவது சிறந்த புள்ளி. கபில் தேவ்(877 புள்ளிகள்), பும்ரா(832 புள்ளிகள்) ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக அதிகமான புள்ளியை பெற்ற பவுலர் ஷமி தான். 

click me!