அஃப்ரிடியின் நேர்மை நல்லா தெரிந்ததுதான்.. அதனால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடைய தேவையில்லை

By karthikeyan VFirst Published Aug 2, 2020, 10:45 PM IST
Highlights

ஷாகித் அஃப்ரிடி தனது கெரியரில் தான் பந்துவீசியதில் யாருக்கு பந்துவீசியது மிகக்கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். 
 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷாகித் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர். அதிரடி பேட்டிங், ஸ்பின் பவுலிங் என அந்த அணியின் குறிப்பிடத்தகுந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். 

பாகிஸ்தான் அணிக்காக 1996லிருந்து 2018ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் ஆடிய ஷாகித் அஃப்ரிடி, 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார் அஃப்ரிடி. 

அந்தவகையில், நீங்கள் பந்துவீசியதிலேயே சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, பிரயன் லாரா மற்றும் டிவில்லியர்ஸ் என்று பதிலளித்துள்ளார்.

Lara and de Villiers

— Shahid Afridi (@SAfridiOfficial)

சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக நிறைய போட்டிகளில் ஆடி, அவருக்கு அதிகமாக பந்துவீசியுள்ள அஃப்ரிடி, ஒருமுறை கூட சச்சினை வீழ்த்தியதில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கரின் பெயரை கூறவில்லை. டெஸ்ட், ஒருநாள் என எந்த விதமான போட்டியிலும், தனது கெரியரில் ஒருமுறை கூட சச்சினை அஃப்ரிடி வீழ்த்தியதில்லை. ஆனால் அஃப்ரிடியின் பவுலிங்கில் சச்சின் டெண்டுல்கரின் ஸ்டிரைக் ரேட் 114.5 ஆகும். 

ஆனாலும் சச்சினை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார் அஃப்ரிடி.  லாராவும் டிவில்லியர்ஸும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் டிவில்லியர்ஸை 5  முறையும் லாராவை ஒருமுறையும் வீழ்த்தியுள்ள அஃப்ரிடி, சச்சினை வீழ்த்தியதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஃப்ரிடி எப்போதுமே மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மையான பதிலை கூறுபவர் அல்ல. இந்திய வீரர்கள் மீது அவர் பாரபட்சம் காட்டுவார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே அவரது இந்த தேர்வும் அப்படித்தான் என்பதால் யாரும் வியப்படைய தேவையில்லை.
 

click me!