கிரிக்கெட்டில் மோசமான வரலாறு படைத்த அஃப்ரிடி.. பிரத்யேக சாதனையின் வீடியோ

Published : Dec 13, 2019, 05:08 PM IST
கிரிக்கெட்டில் மோசமான வரலாறு படைத்த அஃப்ரிடி.. பிரத்யேக சாதனையின் வீடியோ

சுருக்கம்

கிரிக்கெட் வரலாற்றில் அஃப்ரிடி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அஃப்ரிடி என்றாலே அதிரடிதான். அவரது அதிரடியான பேட்டிங்கின் காரணமாக அவரை ரசிகர்கள் பூம் பூம் அஃப்ரிடி என்று அன்புடன் அழைக்கின்றனர்.

மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டாலும், ஆடும் சிறிய இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி விரைவில் ஸ்கோர் செய்வதுடன், ரசிகர்களை ஃபுல் எண்டர்டெய்ன் செய்துவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உலகம் முழுதும் நடக்கும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார் அஃப்ரிடி. வங்கதேச பிரீமியர் லீக்கில் தாக்கா பிளாட்டூன் அணியில் ஆடிவரும் அஃப்ரிடி, ராஜ்ஷாஹி ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். 

அஃப்ரிடியின் கிரிக்கெட் கெரியரில் இது அவரது 100வது டக் அவுட். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 100 டக் அவுட்டுகள் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் அஃப்ரிடி.

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?