பாபர் அசாமை விட முகமது ரிஸ்வான் தான் பெஸ்ட் கேப்டன்..! அஃப்ரிடி மருமகனின் உள்ளடி வேலை

By karthikeyan VFirst Published Dec 22, 2021, 5:10 PM IST
Highlights

பாபர் அசாமை விட முகமது ரிஸ்வான் தான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி கூறியிருக்கிறார்.
 

பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக கெத்தாக நடைபோடுகிறது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்படுபவர் பாபர் அசாம். 

பாபர் அசாம் பேட்டிங்கில் அசத்திவரும் அதேவேளையில், கேப்டன்சியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணிக்காக வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் தொடக்க ஜோடி டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளை படைத்துவருகிறது. பழைய சாதனைகளை எல்லாம் தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறது.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு நிகரான சிறந்த வீரராக ஜொலித்துவருகிறார் முகமது ரிஸ்வான். பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரராகவும், மாபெரும் சக்தியாகவும் திகழ்கிறார் ரிஸ்வான்.

ரிஸ்வானும் நல்ல கேப்டன் தான். ஆனால் பாபர் அசாம் கேப்டனாக இருப்பதால், அவருக்கு கேப்டன்சி கிடைக்கவில்லை. ரிஸ்வான் தலைமையில் தான், கடைசியாக நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி தான் கோப்பையை ஜெயித்தது.

இந்நிலையில், ரிஸ்வானின் கேப்டன்சி குறித்த பேசியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வானின் ஆளுமை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆரம்பக்கட்டத்தில் ரிஸ்வானுடன் உள்நாட்டு போட்டிகளில் ஆடியிருக்கிறேன். பாபர் அசாமை விட அவர் தான் சிறந்த கேப்டன். பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி நிறைய வெற்றிகளை குவித்திருக்கிறது. பாபர் அசாம் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆனாலும் ரிஸ்வானுக்கு அடுத்துத்தான் பாபர் அசாம் என்பது என் கருத்து என்றார் ஷாஹீன் அஃப்ரிடி.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடியின் மருமகனான ஷாஹீன் அஃப்ரிடியின் இந்த கருத்து, பாகிஸ்தான் அணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
 

click me!