2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!

Published : Dec 23, 2025, 10:18 PM IST
Shafali Verma

சுருக்கம்

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தனி ஆளாக அதிரடியில் பட்டயை கிளப்பிய ஷெபாலி வர்மா 34 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி வீராங்கனைகள் ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ரன்களும், கேப்டன் சமாரி அட்டப்பட்டு 31 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி அபார வெற்றி

இந்திய அணி தரப்பில் வைஷ்ணவி ஷர்மா, ஸ்ரீ சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிராந்தி கௌட், ஸ்னே ராணா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்பு எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 14 ரன்னில் அவுட் ஆனார். முதல் போட்டியில் அரைசதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்தார்.

ஷெபாலி வர்மா அதிரடி அரை சதம்

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தனி ஆளாக அதிரடியில் பட்டயை கிளப்பிய ஷெபாலி வர்மா 34 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் டி20 போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இப்போது 2வது போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி கேப்டன் சொல்வது என்ன?

இந்த போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ''நாங்கள் பந்துவீசிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பந்துவீச்சாளர்கள் பொறுப்பேற்று அணியை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தனர். ஷஃபாலியும் மற்றவர்களும் நன்றாக பேட் செய்தனர். ராணா அணிக்கு என்ன பங்களிப்பை வழங்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். தீப்தி நீண்ட காலமாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இதேபோல் வைஷ்ணவி பந்துவீசிய விதமும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம். சில சமயங்களில் தவறுகள் நடந்திருந்தாலும், இன்று அது சரியாக அமைந்தது'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?
ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!