டி20 உலக கோப்பையில் ஆட இதுதான் இந்தியா சிறந்த அணி.. நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டரின் அதிரடி தேர்வு

By karthikeyan VFirst Published Jan 9, 2020, 9:12 AM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை விவிஎஸ் லட்சுமணன் தேர்வு செய்திருந்த நிலையில், அவர் தேர்வு செய்ததை விட சிறந்த அணியை நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தேர்வு செய்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை கடந்த ஆண்டு வெல்ல முடியாமல் இழந்த இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. பவுலிங்கிலும் கூட பேட்டிங் ஆட தெரிந்த பவுலர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின்னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

தவானுக்கு பதில் இந்திய அணியில் இடம்பிடித்து, வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அபாரமாக ஆடிய கேஎல் ராகுல், ரோஹித்துடன் உலக கோப்பையில் தொடக்க வீரராக இறக்கப்படுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட பெற்றுவிட்டார். அதேபோல வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோரும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

டி20 உலக கோப்பைக்கு சரியான வீரர்களை தேர்வு செய்து பெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன், டி20 உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்துள்ளார். 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் தேர்வு செய்திருந்த நிலையில், நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸும் இந்திய அணியை தனது பார்வையிலிருந்து தேர்வு செய்துள்ளார். லட்சுமணனை விட சரியான அணியைத்தான்  ஸ்டைரிஸ் தேர்வு செய்துள்ளார். 

தவான், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி இவர்கள் யாருமே இல்லாத ஒரு அணியை லட்சுமணன் தேர்வு செய்திருந்தார். ஆனால் சுந்தரும் சைனியும் அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியான விஷயம். 

இந்நிலையில், ஸ்காட் ஸ்டைரிஸும் இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். பேட்டிங் ஆர்டர் அனைவருக்கும் தெரிந்ததுதான். ரோஹித், ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா. லட்சுமணன் புறக்கணித்த தவான், சாம்சன் ஆகிய இருவரையுமே ஸ்டைரிஸ் தேர்வு செய்துள்ளார். ஆனால், லட்சுமணனை போல இவரும் வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுக்கவில்லை. ஸ்பின்னர்களாக ஜடேஜா, குல்தீப், சாஹல் ஆகிய மூவரையும் எடுத்துள்ளார். 

ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய இரண்டு சீனியர்களையும் ஒதுக்கிவிட்டு நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகிய இருவரையும் எடுத்துள்ளார். பும்ராவுடன் சைனியையும் தீபக் சாஹரையும் எடுத்துள்ளார் ஸ்டைரிஸ். இளம் வீரர் ஷுப்மன் கில்லை டி20 உலக கோப்பையில் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், கில்லையும் அணியில் எடுத்துள்ளார் ஸ்டைரிஸ். ஷிவம் துபேவை ஸ்டைரிஸ் புறக்கணித்துள்ளார்.

ஸ்டைரிஸ் தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், ஷிகர் தவான், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, தீபக் சாஹர். 

லட்சுமணன் தேர்வு செய்த இந்திய அணி:

 

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார். 

click me!