அதுல எங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்ல.. ஸ்ட்ராங்கா இருக்கும் சர்ஃபராஸ்

By karthikeyan VFirst Published Jun 24, 2019, 12:13 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மற்றும் பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு சிறந்ததாக அமையவில்லை. 

முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கிய பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி கண்டது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்து தோலியடைந்தது. 

இந்திய அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது பாகிஸ்தான் அணி. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பவுலிங் தேர்வு செய்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மற்றும் பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர். கேப்டன் சர்ஃபராஸின் ஃபிட்னெஸை ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்த அக்தர், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து சர்ஃபராஸை மேலும் கடுமையாக விமர்சித்தார். 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 336 ரன்களை குவிக்க, பாகிஸ்தான் அணி மீது நெருக்கடி அதிகரித்தது. அந்த அணி சரியாக பேட்டிங் ஆடாமல் டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை மூளையில்லாத கேப்டன் என்று கடுமையாக விமர்சித்தார் அக்தர். சர்ஃபராஸ் அகமதுவின் களவியூகம், பவுலிங் சுழற்சி ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடினால் நெருக்கடி இல்லாமல் ஆடி நல்ல ஸ்கோரை அடிக்கிறது. ஆனால் சவாலான இலக்கை விரட்டும்போது அந்தளவிற்கு பேட்டிங் ஆடுவதில்லை. இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடி வென்ற பாகிஸ்தான், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் முதலில் பேட்டிங் ஆடி வென்றது. 

அதனால் தான் முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக சேஸிங் செய்ய நினைத்ததை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சர்ஃபராஸ், உலக கோப்பை தொடருக்கு முன்னர் பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானை சந்தித்து பேசினேன். அவர் கண்டிஷனை பொறுத்து முடிவெடுக்குமாறு என்னிடம் கூறினார். அதைத்தான் நாங்கள் செய்தோம். எனவே இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததில் எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஏனெனில் ஆடுகளமும் மைதானமும் ஈரப்பதமாக இருந்ததால்தான் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தோம் என்று சர்ஃபராஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!