New Zealand vs South Africa: 2வது டெஸ்ட்டில் சுதாரித்த தென்னாப்பிரிக்கா..! எர்வீ அபார சதம்

Published : Feb 25, 2022, 02:46 PM IST
New Zealand vs South Africa: 2வது டெஸ்ட்டில் சுதாரித்த தென்னாப்பிரிக்கா..! எர்வீ அபார சதம்

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் அடித்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி 2 இன்னிங்ஸ்களிலும் படுமோசமாக பேட்டிங் ஆடியதன் விளைவாக, நியூசிலாந்திடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

நியூசிலாந்து 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

முதல் டெஸ்ட்டில் படுமோசமாக பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் இந்த போட்டியில் சுதாரித்துக்கொண்டனர். ஆரம்பம் முதலே கவனமாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் எர்வீ மற்றும் எல்கர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 111 ரன்களை குவித்தது. எல்கர்  41 ரன்னில் ஆட்டமிழந்தார்.  3ம் வரிசையில் இறங்கிய மார்க்ரமும் நன்றாக ஆடினார். மார்க்ரம் 42 ரன்னில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி சதமடித்த எர்வீ 108 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் ஆட்டமிழந்ததற்கு, அடுத்த ஓவரிலேயே எர்வீயும் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வாண்டெர் டசனும் டெம்பா பவுமாவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்ட முடிவில் டசன்13 ரன்களுடனும், பவுமா 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் அடித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி