இது வெறும் தொடக்கம் தான்டா தம்பி.. அறிமுக இன்னிங்ஸில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு அக்கா சாரா வாழ்த்து

By karthikeyan VFirst Published Dec 15, 2022, 7:08 PM IST
Highlights

ரஞ்சி தொடரின் அறிமுக போட்டியிலேயே சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சதமடித்து அசத்திய நிலையில், அவருக்கு அவரது அக்கா சாரா டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவரான சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் ஆடி 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை படைத்தவர். கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் புகழுக்குரியவர் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர் ரஞ்சி தொடரில் அவரது முதல் போட்டியில் சதமடித்து அசத்தியவர். 1988ம் ஆண்டு அவரது அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்திருந்தார். அதேபோலவே, அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி தொடரின் அறிமுக போட்டியில் சதமடித்து அசத்தினார்.

ரஞ்சி டிராபி: சுதர்சன், ஜெகதீசன், அபரஜித் அபார சதம்.. ஹைதராபாத்துக்கு எதிராக தமிழ்நாடு அணி ஆதிக்கம்

ரஞ்சி தொடரில் கோவா அணியில் ஆடுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். கடந்த 13ம் தேதி தொடங்கி ரஞ்சி தொடர் நடந்துவருகிறது. கோவா அணி முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கோவா அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 547 ரன்களை குவித்தது. கோவா வீரர் பிரபுதேசாய் 212 ரன்களை குவித்தார். அர்ஜுன்  டெண்டுல்கர் அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்து 120 ரன்களை குவித்தார்.

தனது தந்தை சச்சின் டெண்டுல்கரை போலவே அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். அர்ஜுன் டெண்டுல்கர் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருந்து, தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி சதமடித்துள்ளார். 

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்த தனது தம்பி அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ”ஒரு அக்காவாக இன்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது வெறும் தொடக்கம் தான். உனக்காக எப்போதும் நான் இருக்கிறேன். உன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு இருக்கிறது. உனது கடும் உழைப்பு மற்றும் பொறுமைக்கான பலன் கிடைக்க தொடங்கிவிட்டது” என்று சமூக வலைதளத்தில் அர்ஜுன் டெண்டுல்கரின் புகைப்படத்தை பதிவிட்டு பெருமிதம் கொண்டுள்ளார் சாரா டெண்டுல்கர்.
 

click me!