IPL 2022: உனக்கான நேரம் வரும்டா தம்பி.! தம்பி அர்ஜுனுக்கு அக்கா சாரா டெண்டுல்கரின் மெசேஜ்

Published : May 23, 2022, 04:44 PM ISTUpdated : May 23, 2022, 05:59 PM IST
IPL 2022: உனக்கான நேரம் வரும்டா தம்பி.! தம்பி அர்ஜுனுக்கு அக்கா சாரா டெண்டுல்கரின் மெசேஜ்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை  இந்தியன்ஸ் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காத அர்ஜுன் டெண்டுல்கரை உத்வேகப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார் சாரா டெண்டுல்கர்.  

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல்லில் கடந்த 2 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்துவரும் நிலையில், அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை தழுவியது. அணி காம்பினேஷன் சரியாக அமையாததால், நிறைய மாற்றங்களை செய்தது மும்பை அணி. ஆனாலும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கடைசி போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை.

உண்மையாகவே, அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மும்பை அணி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களுக்கே பெரிய வருத்தம் தான்.

வாட்டர் பாயாக அர்ஜுன் டெண்டுல்கர் வீரர்களுக்கு தண்ணீர், கூல்டிரிங்ஸ் எடுத்துச்செல்வது, மெசேஜ் சொல்வது ஆகியவற்றையே செய்துவருகிறார். இது அனைத்து கிரிக்கெட்டர்களின் கெரியரிலும் நடப்பதுதான். சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் அர்ஜுன் மட்டும் ஸ்பெஷல் கிடையாது. ஆனால் சச்சின் மகன் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஏகப்பட்ட மாற்றங்களை செய்த மும்பைஅணி அவருக்கும் ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாம் என்பதே பலரது கருத்து.

அந்தவகையில், மும்பை அணி ஆடிய போட்டியின்போது, வாட்டர்பாயாக செயல்பட்ட அர்ஜுன் டெண்டுல்கரின் புகைப்படத்தை போட்டு, உனக்கான நேரம் வரும் என அவரது அக்காவும் சச்சினின் மகளுமான சாரா டெண்டுல்கர் பதிவிட்ட பாடல் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிவருகிறது. Gully Boy படத்தில் இடம்பெற்ற அந்த பாடலை பதிவிட்டு தனது தம்பியை சாரா டெண்டுல்கர் ஊக்கப்படுத்திய பதிவு வைரலாகிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!