Sanju Samson: ப்ளீஸ் என்னை விட்ருங்க! நான் 'அந்த' டீமுக்கு போறேன்! RR அணியிடம் கெஞ்சும் சஞ்சு சாம்சன்!

Published : Aug 07, 2025, 10:09 PM IST
Sanju Samson and MS Dhoni

சுருக்கம்

தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படி ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sanju Samson Wants To Leave Rajasthan Royals: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் விலகக்கூடும் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சஞ்சு சாம்சனை வாங்க ஆர்வம் காட்டிய நிலையில், ராஜஸ்தான் அணி அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற விரும்புவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஞ்சு சாம்சனுக்கு வலை விரிக்கும் சிஎஸ்கே

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போட்டிகள் முடிந்த பிறகு சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் செல்லக்கூடும் என்ற ஊகங்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன. வயது மற்றும் உடற்தகுதி காரணமாக தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற சூழ்நிலை உள்ள நிலையில், சஞ்சு சாம்சன் அந்த இடத்தை நிரப்புவார் என கருதி சிஎஸ்கே அணி வீரர்கள் டிரேட் முறையில் அவரை வாங்க முயற்சித்ததாக தகவல் வெளியாகி இருந்தன.

கொல்கத்தா அணியும் களத்தில் குதித்தது

சஞ்சு சாம்சன் வீரர்கள் டிரேட் முறையில் கிடைத்தால் அவரை அணியில் சேர்க்க விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை தேடி வருகிறது. இதற்கு சஞ்சு சாம்சன் சரியாக இருப்பார் எனக்கருதி அவருக்கு வலைவிரித்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ''சாம்சன் அல்லது வேறு எந்த வீரர்களையும் வேறு அணிக்கு மாற்ற முடிவு செய்யவில்லை. சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளார். அவர் எங்கள் கேப்டன்'' என்று கூறியதாகவும் தகவல்கள் கசிந்தன.

ராஜஸ்தான் அணியை விட்டு வேளியேற துடிக்கும் சஞ்சு சாம்சன்

அதே வேளையில் மினி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்கள் டிரேட் முறை மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேற அல்லது மினி ஏலத்தில் பங்கேற்கும் வகையில் அணியில் இருந்து தன்னை விடுவிக்க‌ வேண்டும் என சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐபிஎல் 2025 சீசனின்போது ராஜஸ்தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் நிர்வாகம் சஞ்சு சாம்சனை மதிக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. இதில் அதிருப்தி அடைந்த சஞ்சு சாம்சன் தன்னை விடுவிக்கும்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் அப்படி ராஜஸ்தானை விட்டு வெளியேறினால் சிஎஸ்கேவுக்கு வரவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

சஞ்சு சாம்சனால் வெளியேற முடியுமா? ஐபிஎல் விதி என்ன?

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்கள் அணியை விட்டு வெளியேறுவது தொடர்பாக சில விதிகள் உள்ளன. ஐபிஎல்லின் வர்த்தக மற்றும் தக்கவைப்பு கொள்கைகளின்படி, வீரர் அணியை விட்டு வெளியேறுவது குறித்து முடிவெடுக்க முடியாது. இந்த முடிவு முழுக்க முழுக்க அணி நிர்வாகத்திடம் உள்ளது. ஒரு வீரர் தக்கவைப்பு அல்லது ஏலம் மூலம் அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் அவர் அந்த அணிக்காக விளையாட ஒப்பந்தப்படி கடமைப்பட்டிருக்கிறார். ஆகவே ராஜஸ்தான் ராயல்ஸ் மனது வைத்தால் மட்டுமே சஞ்சு சாம்சனால் அந்த அணியை விட்டு வெளியேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!