அவரு சுத்த வேஸ்ட்.. அவருக்கு இந்த பையன் எவ்வளவோ பரவாயில்ல!! சீனியர் வீரரை வெறுத்து ஒதுக்கும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Mar 22, 2019, 1:36 PM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசை சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மேலும் மாற்று விக்கெட் கீப்பரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கல் தீர்வு காணப்படாமலேயே உள்ளது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசை சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதித்த பிறகு, ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராயுடு சொதப்பினார். ஸ்விங் பவுலிங்கை எதிர்கொண்டு ஆட திணறுகிறார். அதேபோல மித வேகப்பந்து வீச்சையும் எதிர்கொள்ள ராயுடு திணறுகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பியதை அடுத்து, ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அனியிலிருந்து நீக்கப்பட்டது, அந்த இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் வேறு வீரரை தேடுவதை உறுதிப்படுத்தியது. 

ராயுடு சொதப்பிய அதேவேளையில், விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடினார். எனவே விஜய் சங்கரை 4ம் வரிசையில் இறக்கினால், ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதோடு, பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார் விஜய் சங்கர். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசைக்கு சரியாக இருப்பார்.

ஆனால் நான்காம் வரிசைக்கு பல முன்னாள் ஜாம்பவான்களும் பல பெயர்களை பரிந்துரைத்து வருகின்றனர். ரிஷப் பண்ட்டின் பெயரை பாண்டிங்கும், ராயுடுவின் பெயரை ஹைடனும், விஜய் சங்கரின் பெயரை சிலரும் புஜாராவின் பெயரை கங்குலியும் பரிந்துரைத்துள்ளனர். 

4ம் வரிசை சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், மாற்று விக்கெட் கீப்பரும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். எனினும் உலக கோப்பை அணியில் ரிஷப் பண்ட் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகமாக உள்ளது. 

இவ்வாறு 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் 4ம் வரிசைக்கு ராயுடு சரியாக இருக்கமாட்டார். விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்கலாம். அதேபோல மாற்று விக்கெட் கீப்பரை பொறுத்தமட்டில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ரிஷப் பண்ட்டையே எடுக்கலாம். தொடக்க விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்டால் அந்த இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை நோக்கி தினேஷ் கார்த்திக் நகர்த்தி செல்லமாட்டார். அதனால் நான் ஒருபோதும் ஒருநாள் போட்டிக்கு தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யமாட்டேன். ரிஷப் பண்ட்டும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்றாலும், தினேஷ் கார்த்திக்கிற்கு ரிஷப் பரவாயில்லை. அந்த வகையில் ரிஷப் பண்ட்டை எடுக்கலாம் என்று மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!