ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலிய கேப்டனா? நியூசிலாந்து கேப்டனா..? ஐயோ பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு

By karthikeyan VFirst Published Mar 5, 2019, 3:28 PM IST
Highlights

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி ரோஹித், தவான், ராயுடு ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கோலியும் விஜய் சங்கரும் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. 

இரண்டாவது போட்டியில் இந்திய அணி எந்த மாற்றங்களும் செய்யவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் களமிறங்கியுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் முதல் பேட்டிங்கில் சராசரி ஸ்கோர் 292. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்று தெரிந்தும், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி ரோஹித், தவான், ராயுடு ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கோலியும் விஜய் சங்கரும் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியில் டாஸ் போடுவதை தொகுத்து வழங்கினார் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர். அப்போது டாஸ் போடும்போது ஆரோன் ஃபின்ச்சை நியூசிலாந்து கேப்டன் என்று கூறிவிட்டார். கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்துவரும் போட்டியில், இவ்வளவு கவனக்குறைவாகவா பேசுவது..? ஏற்கனவே பல விவகாரங்களில் வாங்கிக்கட்டியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், இந்த விஷயத்திலும் கண்டிப்பாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுவார். 
 

click me!