தோனியையே விமர்சிக்கிறீங்களா..? தல தோனிக்கு ஆதரவாக வரிந்துகட்டி டெண்டுல்கருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jun 26, 2019, 1:22 PM IST
Highlights

தோனியின் மந்தமான பேட்டிங்கை விமர்சித்த சச்சின் டெண்டுல்கருக்கு முன்னாள் வீரர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. உலக கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்திய அணியோ அபாரமாக ஆடிவருகிறது. 

உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தோனி. கடந்த ஆண்டு முழுவதும் மோசமாக ஆடி விமர்சனங்களை சந்தித்துவந்த தோனி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஃபார்முக்கு வந்து ஹாட்ரிக் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். தோனியின் ஃபார்ம் இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தது. 

தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதால் உலக கோப்பையில் அடித்து நொறுக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து அசத்தினார். ஆனால் உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. இதுவரை 4 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 90 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடி, 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். 

தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் மந்தமான ஆட்டம் குறித்த அதிருப்தியை சச்சின் டெண்டுல்கரே வெளிப்படுத்தியிருந்தார். தோனியின் மந்தமான பேட்டிங்கை ரசிகர்களும் விமர்சித்தனர்.

தோனியின் மந்தமான ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சந்தீப் பாட்டில்.

தோனி குறித்து ஊடகம் ஒன்றுக்கு சந்தீப் பாட்டில் எழுதியுள்ள கட்டுரையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி மந்தமாக ஆடினார் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் அந்த சூழலுக்கு ஏற்பவும் ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் ஆடினார் தோனி. கோலி உள்ளிட்ட முக்கியமான நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், பொறுப்புடன் ஆடினார்கள் தோனியும் கேதரும். தோனி ஒரு பேட்ஸ்மேன் மட்டுமல்ல. கேப்டனுக்கும் பவுலர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்பவர். அவர் சரியான நேரத்தில் வெகுண்டெழுவார் என்று சந்தீப் பாட்டில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

click me!