பொம்மையை தொலைத்த சின்னப்புள்ள மாதிரி நடந்துகொள்கிறார்..! ரமீஸ் ராஜாவை செமயா விளாசிய சல்மான் பட்

By karthikeyan VFirst Published Jan 1, 2023, 9:18 PM IST
Highlights

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரமீஸ் ராஜா, பொம்மையை களவு கொடுத்த குழந்தை மாதிரி நடந்துகொள்வதாக சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து அண்மையில் ரமீஸ் ராஜா நீக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை பதிவு செய்தது.

அதற்கு முன்பே, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இருபெரும் ஐசிசி தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி தேர்வு பாரபட்சமாக அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்போதே ரமீஸ் ராஜா மற்றும் கேப்டன் பாபர் அசாம் விமர்சிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனதும், பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உருவானதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு புதிய தலைவராக நஜாம் சைதி நியமிக்கப்பட்டார்.

இனிமேல் ஐபிஎல்லில் ஆடிட்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் ஈசியா வந்துர முடியாது..! கடிவாளம் போட்ட பிசிசிஐ

பாகிஸ்தான் அணி தேர்வுக்குழு தலைவரும் நீக்கப்பட்டு, ஷாஹித் அஃப்ரிடி தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடருக்கான அணியை மட்டுமல்லாது ஆடும் லெவனை தேர்வு செய்வதிலும் ஷாஹித் அஃப்ரிடி பங்களிப்பு செய்யவும் அஃப்ரிடிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்தே ரமீஸ் ராஜா சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசிவருகிறார். அந்தவகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கமெல்லாம் இல்லை. அவர்களுக்கு அதிகாரம் தான் முக்கியம் என்று ரமீஸ் ராஜா பேசியிருந்தார்.

ரமீஸ் ராஜாவின் பேச்சு, பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், ரமீஸ் ராஜாவின் பேச்சு விரும்பத்தகாத வகையில் உள்ளது. இதற்கு முன்பும் பல நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களெல்லாம் இப்படி பேசியதில்லை. ரமீஸ் ராஜா, பொம்மையை தொலைத்த குழந்தை போல நடந்துகொள்கிறார். அவருக்கு வர்ணனை செய்யும் திறமை இருக்கிறது. எனவே அவர் வர்ணனையாளராக அவரது பணியை தொடரலாம். அதைவிடுத்து இப்படியெல்லாம் பேசுவதை  தவிர்க்க வேண்டும். 

2023 ஒருநாள் உலக கோப்பைக்கு 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்தது பிசிசிஐ..! விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு கூடுதல் டாஸ்க்

ரமீஸ் ராஜாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக சுதந்திரமாக பணியாற்ற முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் ஆதரவு அவருக்கு இருந்தது. அவர் ஒன்றும் திடீரென ஓவர்நைட்டில் அந்த பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருக்கு செயலாற்ற முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் தான் நீக்கப்பட்டார் என்று சல்மான் பட் தெரிவித்தார்.
 

click me!