
ஐபிஎல் 14வது சீசனின் லீக் சுற்றில் 29 போட்டிகள் நடந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய 31 போட்டிகளை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அங்கேயோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடத்தப்படலாம் என தகவல் வெளியானது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட, இலங்கையில் நடத்த அனுமதி கோரி பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியது. இங்கிலாந்தில் நடத்த ஏதுவாக, இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ஒத்திவைக்குமாறு பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது.
ஆனால் இங்கிலாந்தில் நடத்தும் திட்டமில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் வாய்ப்பு இருந்தால், பிசிசிஐ ஐபிஎல்லை அமீரகத்தில் தான் நடத்தும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கண்டிஷனை விட அமீரக கண்டிஷன் தான் ஐபிஎல்லை நடத்த இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.