கீமோ பாலின் கடைசி நேர காட்டடி! கோப்பையை வெல்ல பாட்ரியாட்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்

By karthikeyan VFirst Published Sep 15, 2021, 10:28 PM IST
Highlights

கீமோ பாலின் கடைசி நேர காட்டடி பேட்டிங்கால், கரீபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி இன்று நடந்துவருகிறது. செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆண்ட்ரே ஃப்ளெட்சர் 7 பந்தில் 11 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கார்ன்வால் அதிரடியாக ஆடி 32 பந்தில் 43 ரன்கள் அடித்தார். மார்க் டீயல் ஒரு ரன்னிலும், டேவிட் வீஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

சிறப்பாக ஆடிய ரோஸ்டான் சேஸ் 43 ரன்னில் 18வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழக்க, 18 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்திருந்தது லூசியா கிங்ஸ் அணி. 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய கீமோ பால், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் விளாச, கடைசி 2 ஓவரில் கீமோ பால் 4 சிக்ஸர்களை விளாசியதன் விளைவாக, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்த கிங்ஸ் அணி, கோப்பையை வெல்ல பாட்ரியாட்ஸ் அணிக்கு 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

click me!