சஹா vs ரிஷப் பண்ட்.. அஷ்வின் vs ஜடேஜா.. யாருக்கு வாய்ப்பு? யாருக்கு ஆப்பு?

By karthikeyan VFirst Published Feb 20, 2020, 5:43 PM IST
Highlights

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் 2 இடங்களுக்கான வீரர்கள் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் சமபலம் வாய்ந்த இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். அதனால் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும்.

நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது மிகக்கடினம். எனவே இந்திய அணி பெஸ்ட் லெவன் வீரர்களுடன் இறங்கியாக வேண்டும். தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா என்பது உறுதியாகிவிட்டது. புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரும் உறுதியாக ஆடும் லெவனில் இருப்பவர்கள். 

விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்பின்னர் ஆகிய 2 இடங்களுக்குத்தான் யார் எடுக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

சஹா vs ரிஷப் பண்ட்:

உள்நாட்டு போட்டிகளில் சஹா தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் சிறப்பாக இல்லையென்பதால், அவர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழலும் என்பதால், அனுபவ விக்கெட் கீப்பர் ஆடுவதே சிறந்தது என்பதால், சஹா விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டார். ஆனால் வெளிநாட்டு தொடர்களில் ஒரு பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் சதமடித்திருக்கிறார். 

நியூசிலாந்தில் பெரிதாக ஸ்பின்னுக்கு வேலையில்லை என்பதால், விக்கெட் கீப்பிங்கை விட பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில் ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்படலாம். ஆனால் விக்கெட் கீப்பிங்கிற்கு அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தால், சஹாவே எடுக்கப்படுவார். 

அஷ்வின் vs ஜடேஜா:

அதேபோல அஷ்வின் - ஜடேஜா இருவரில் யார் எடுக்கப்படுவார் என்பதும் மிகப்பெரிய கேள்வி. அஷ்வின் இந்திய அணியின் ஸ்டார் ஸ்பின்னர். அதேவேளையில் வெளிநாடுகளில் அஷ்வினை விட ஜடேஜாவின் பவுலிங் சிறப்பாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஜடேஜா நன்றாக பேட்டிங் ஆடக்கூடியவர். ஃபீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர்.

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து - நியூசிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மொத்தமாக அஷ்வின் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 48 விக்கெட்டுகளையும் ஜடேஜா 10 டெஸ்ட்டில் ஆடி 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். பவுலிங்கிலும் ஜடேஜாவின் செயல்பாடு சிறப்பாகவே இருந்திருக்கிறது. 
 

click me!