கழுவுற மீன்ல நழுவுற மீனுதான் நம்ம சச்சின்.. மாஸ்டர் பிளாஸ்டருக்கு அன்னக்கி கசந்தது இன்னக்கி இனிக்குது

By karthikeyan VFirst Published Jul 3, 2019, 1:22 PM IST
Highlights

தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங் என்னை அதிருப்தியடைய செய்தது. இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ரொம்ப மெதுவாக ஆடிவிட்டனர் - சச்சின் டெண்டுல்கர்

உலக கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங்கை கழுவி ஊற்றிய சச்சின் டெண்டுல்கர், வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பாராட்டியுள்ளார். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிப்பது ரோஹித், விராட் கோலி மற்றும் பும்ரா தான். இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. 

உலக கோப்பைக்கு முன்னர் இந்திய அணியில் இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கல் உலக கோப்பையிலும் தொடர்கிறது. மிடில் ஆர்டரில் மந்தமாக ஆடுவதுபோல் தெரிந்தாலும் தோனி ஒருவர் மட்டுமே நம்பிக்கையளிக்கிறார். அவர் மட்டுமே பொறுப்புடன் கடைசி வரை ஆடி முடிந்தவரை ரன்களை உயர்த்தி கொடுக்கிறார். 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங்கை சச்சின் டெண்டுல்கர் விமர்சித்திருந்தார். அதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த சச்சின், தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங் என்னை அதிருப்தியடைய செய்தது. இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ரொம்ப ஸ்லோவாக ஆடிவிட்டனர். ஸ்பின் பவுலர்களின் 39 ஓவர்களை ஆடி 119 ரன்கள் மட்டுமே இந்திய அணி அடித்தது. அது நல்ல விஷயம் அல்ல. கோலி அவுட்டான பிறகு ஒரு ஓவருக்கு 2-3 டாட் பால்கள் விடப்பட்டன என்று விமர்சித்திருந்தார். 

அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தோனி மந்தமாகவே ஆடினார். 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 45 ஓவரில் 267 ரன்கள் அடித்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் இணைந்து வெறும் 39 ரன்கள் மட்டுமே அடித்தனர். இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லோ டெலிவரிகளாக வீசி நெருக்கடி கொடுத்தனர். ஆடுகளமும் மந்தமாகிவிட்டதால் அந்த நேரத்தில் அடித்து ஆடுவது கடினம் தான் என்றாலும் பெரிய ஷாட்டுக்கு தோனியும் கேதரும் முயற்சிக்கவே இல்லை என்பது விமர்சனத்துக்கு உள்ளானது. 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் தோனி பெரிதாக அடித்து ஆடிவிடவில்லை. அந்த குறிப்பிட்ட ஆடுகளத்தின் தன்மைக்கு என்ன ஸ்கோர் சரியாக இருக்கும் என்பது தோனிக்கு தெரியும். எனவே அணியின் நலனை கருத்தில்கொண்டு அந்த ஸ்கோரை அடித்துவிடுவார் தோனி. தோனி மிடில் ஓவர்களில் மந்தமாக ஆடினாலும் கடைசி ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை ஆடி ஈடுகட்டிவிடுவார். எனவே தோனி கடைசி வரை நிற்பதுதான் முக்கியம். அப்படி நின்றுவிட்டால் ஸ்கோரை உயர்த்திவிடுவார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 45வது ஓவரிலேயே அவுட்டாகிவிட்டார். அதனால்தான் அந்த போட்டியில் அவரது மந்தமான பேட்டிங் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனியின் மந்தமான பேட்டிங்கை விமர்சித்த சச்சின் டெண்டுல்கர், வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தோனியை பாராட்டியுள்ளார். தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், வங்கதேசத்துக்கு எதிராக தோனி ஆடியது முக்கியமான இன்னிங்ஸ். அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்தார். அவர் 50வது ஓவர் வரை பேட்டிங் செய்தால், அவருடன் ஆடும் சக வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி உதவுவார். இதுதான் அவர் செய்யவேண்டியது, அதை சரியாக செய்தார். அவரை பொறுத்தவரை அணிக்கு என்ன தேவையோ, அந்த குறிப்பிட்ட சூழலில் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்வார். வங்கதேசத்துக்கு எதிராகவும் அதை சரியாக செய்தார் என்று சச்சின் பாராட்டியுள்ளார். 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும் தோனி அதைத்தான் செய்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோலி ஆட்டமிழந்தபிறகு பின்வரிசையில் பெரிதாக பேட்ஸ்மேன்கள் இல்லாததால் பொறுப்பு தோனியின் மீது இறங்கியது. எனவே விக்கெட்டை இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைப்பதுதான் முக்கியம் என்பதால் கேதருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடினார். ஆனால் அதிகமான சிங்கிள்கள் ரொரேட் செய்யாதது பிரச்னை ஆனது. ஆனாலும் அந்த பிட்ச்சின் தன்மை, ஆஃப்கானிஸ்தான் பவுலர்களின் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றை சமாளித்து அந்த ஆடுகளத்திற்கு என்ன ஸ்கோர் போதுமானதாக இருக்குமோ அதற்கு அருகில் ஸ்கோரை எடுத்துச்சென்றார். அன்றைக்கு திட்டிய சச்சின், இன்றைக்கு பாராட்டியுள்ளார். அந்த திட்டை ஈடுகட்டியதற்காக பாராட்டியுள்ளார் போல....

சச்சின் டெண்டுல்கர் சர்ச்சையான கருத்துகளை பொதுவாகவே பேசமாட்டார். தற்போதைய வீரர்களின் ஆட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தோ வீரர்கள் குறித்தெல்லாம் பேசமாட்டார். கங்குலி, கம்பீர் போன்றெல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு என்ற ரீதியில் நெற்றியடி கருத்தை கூறுவதற்கெல்லாம் யோசிப்பார். தனது இமேஜை மெயிண்டன் செய்வதில் கவனமாக இருப்பார். கழுவுற மீன்ல நழுவுற மீனாக, மிகவும் பாதுகாப்பாகத்தான் பேசுவார். அப்படியிருக்கையில், ஆஃப்கானிஸ்தான் போட்டிக்கு பின்னர் தோனியின் மந்தமான இன்னிங்ஸை அரிதினும் அரிதாக விமர்சித்துவிட்டார். அதை விமர்சனம் என்று கூட சொல்ல முடியாது. அவரது அதிருப்தி என்றுதான் கூறியிருந்தார். ஆனால் அதற்கே சச்சின் டெண்டுல்கர் மீது பல்வேறு விமர்சனங்கள் பாய்ந்தன. தோனியை அன்றைக்கு விமர்சித்தற்கு பிராய்ச்சிதமாக இப்போது பாராட்டியுள்ளதாகத்தான் தோன்றுகிறது. 

click me!