அவங்க 2 பேரும் இனிமேல் வேலைக்கு ஆகமாட்டாங்க!இந்திய அணியில் இந்த பசங்கள சேருங்க- முன்னாள் வீரர் முரட்டு அட்வைஸ்

By karthikeyan VFirst Published Jan 9, 2022, 2:59 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனாலும் அவர்களது திறமையின் மீதான நம்பிக்கை மற்றும் கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றின் விளைவாக அவர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அபாரமாக ஆடிவருகின்றனர். சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே மீது இவர்கள் அழுத்தம் போடுகின்றனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் ஆடிய புஜாராவும் ரஹானேவும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் இடத்தை தக்கவைக்க நல்ல இன்னிங்ஸ் ஒன்று தேவை என்ற கட்டாயத்தில், அந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடினர். ஆனால் அதே இன்னிங்ஸில் ஹனுமா விஹாரியும் அபாரமாக பேட்டிங் ஆடி அவர்களுக்கு டஃப் கொடுத்தார். 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் விஹாரி.

புஜாரா, ரஹானே வருடக்கணக்காக திணறிவரும் அதேவேளையில், ஷ்ரேயாஷ் ஐயர் மற்றும்  ஹனுமா விஹாரி ஆகியோர் சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு புஜாரா, ரஹானேவை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். ஆனால் 3வது டெஸ்ட்டில் கோலி வந்துவிட்டால் விஹாரி தான் நீக்கப்படுவார். அதுதான் எதார்த்தம்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சபா கரீம், மிடில் ஆர்டர் பிரச்னைக்கு இந்திய அணி மிகவும் தாமதமாக ரியாக்ட் செய்கிறது. இந்திய அணியின் முதுகெலும்பே மிடில் ஆர்டர் தான். எனவே அந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும். 4-5 இன்னிங்ஸ்களுக்கு ஒருமுறை 40-50 ரன்கள் அடிப்பது, புஜாரா - ரஹானே மாதிரியான அனுபவமான வீரர்களுக்கு சர்வ சாதாரண விஷயம். அதனால் அவர்கள் நன்றாக ஆடுவதாக நினைத்துவிடக்கூடாது.  இந்திய அணி சரியான திசையில் செல்கிறதா என்று பரிசீலிப்பது அவசியம்.

இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமென்றால், சில கடினமனா முடிவுகளை எடுக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் கொண்ட வீரர்கள் அணிக்கு பலம் சேர்ப்பார்களேயானால் அதை செய்ய வேண்டும். 

புஜாரா, ரஹானே அனுபவமான வீரர்கள். எனவே எப்போதாவது பெரிய இன்னிங்ஸ் ஆடத்தான் செய்வார்கள். ஆனால் அதுவே போதுமானதா என்று யோசிக்க வேண்டும். அவர்களை விட நன்றாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.
 

click me!