டி20 உலக கோப்பையை ஏராளமான மேட்ச் வின்னர்கள், பவர் ஹிட்டர்களை கொண்ட அந்த அணிதான் வெல்லும்-முன்னாள் இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Jul 1, 2021, 7:52 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் தனது ஆருடத்தை தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபரில் தொடங்குகிறது. இந்த உலக கோப்பை இந்தியாவில் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று பிசிசிஐ, ஐசிசியிடம் தெரிவித்துவிட்டது.

எனவே இந்த டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அமீரகத்தில் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் நடக்கவுள்ளன. ஐபிஎல் எஞ்சிய தொடர் முடிந்ததும், டி20 உலக கோப்பை அமீரகத்தில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சபா கரீம், எனது நம்பர் 1 அணி வெஸ்ட் இண்டீஸ். நம்பர் 2 இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏராளமான மேட்ச் வின்னர்கள், பவர் ஹிட்டர்கள் உள்ளனர். இந்திய அணி அனுபவமும் இளமையும் கலந்த நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை புதிய தளத்திற்கு எடுத்துச்சென்ற இங்கிலாந்து அணியும் டி20 உலக கோப்பையில் கடும் போட்டியாளராக இருக்கும் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் பல்வேறு டி20 தொடர்களில் ஆடி டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்களாக திகழும் கெய்ல், பொல்லார்டு, ஆண்ட்ரே ரசல், ட்வைன் பிராவோ என பல மேட்ச் வின்னர்கள் மற்றும் பவர் ஹிட்டர்களை கொண்ட அணி வெஸ்ட் இண்டீஸ். எனவே தான் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக சபா கரீம் கருதுகிறார்.

click me!