IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்! சேப்பாக்கத்தில் பவர்ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சிஎஸ்கே

Published : Apr 03, 2023, 08:37 PM IST
IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்! சேப்பாக்கத்தில் பவர்ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சிஎஸ்கே

சுருக்கம்

ஐபிஎல்லில் சென்னை சேப்பாக்கத்தில் பவர்ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சிஎஸ்கே அணி சாதனை படைத்தது.  

ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், மார்க் உட், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின்  தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் இணைந்து லக்னோ அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் ருத்ரதாண்டவம் ஆடினார். கடந்த போட்டியில் 92 ரன்களை குவித்த ருதுராஜ், விட்ட இடத்தில் இருந்து இன்னிங்ஸை தொடர்வது போல ஆடினார். 

அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 25 பந்தில் அரைசதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட். அவருடன் இணைந்து டெவான் கான்வேவும் அடித்து ஆட, பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்தது. 16 ஆண்டுகால ஐபிஎல்லில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியின் அதிகபட்ச பவர்ப்ளே ஸ்கோர் இதுதான். இதற்கு முன் 2018 ஐபிஎல்லில் கேகேஆருக்கு எதிராக சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் 75 ரன்கள் அடித்திருந்தது. அந்த சாதனையை ருதுராஜ் - கான்வே ஜோடி முறியடித்தது.

மேலும், ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணியின் 3வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2014ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி 100 ரன்களையும், 2015ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக பவர்ப்ளேயில் 90 ரன்களையும் குவித்துள்ளது சிஎஸ்கே அணி.

அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு சிஎஸ்கே அணி 110 ரன்களை குவித்தது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு
Vaibhav Sooryavanshi: மரண காட்டு காட்டிய வைபவ்.. ஒரே மேட்ச்ல் இத்தனை சாதனைகளா..?