ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடக்க உள்ள நிலையில், ஆர்சிபி வீரர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் ஜெர்சி மாற்றப்பட்ட நிலையில், நேற்று பெங்களூருவில் நடந்த ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சியின் போது ஆர்சிபி அணியின் பெயர், லோகோ மாற்றப்பட்டதோடு, புதிய ஜெர்சியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விராட் கோலி, மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஆர்சிபி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பாப் டூப்ளெசிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய விராட் கோலி கூறியிருப்பதாவது: சென்னைக்கு விரைவில் புறப்பட வேண்டிய தேவை உள்ளது. எங்களுக்கான விமானமும் தயாராக உள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் என்னை கிங் என்று அழைக்க வேண்டும். விராட் என்று அழைத்தாலே போதுமானது.
கிங் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும். அப்படி அழைக்கும் போது எனக்கே ஒரு மாதிரியாக கூச்சமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தான் நேற்றைய நிகழ்ச்சி முடிந்த நிலையில் சென்னை வந்த ஆர்சிபி வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
RCB HAS REACHED CHENNAI FOR THE FIRST MATCH OF IPL 2024.
- The Craze for Kohli even at midnight is huge. 🤯🔥pic.twitter.com/WVT4955J9W