தொடர்ந்து சொதப்பும் ரோகித்; கேப்டன்சிக்கும் சிக்கல்! மீண்டும் கேப்டனாவாரா பும்ரா?

By Velmurugan s  |  First Published Dec 7, 2024, 12:31 PM IST

ரோகித் சர்மா அடுத்தடுத்து பேட்டிங்கில் சொதப்பும் நிலையில் அவரது கேப்டன்ஸி தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.


இந்திய மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் முறையே ரோகித் சர்மா 11, 18, 8, 0, 52, 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி (Border Gavaskar Trophy) தொடரில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது ஆஸிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் பகல் இரவு போட்டியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ரோகித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

Tap to resize

Latest Videos

இதற்கு முன்னதாக நியூசிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் முறையே 11, 18, 8, 0, 52, 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 8, 23 ரன்களுக்கு ரோகித் அவுட்டானார். இப்போது ஆஸிக்கு எதிரான போட்டியிலும் 3 ரன்களில் ஆட்டமிழந்தது அவரது மோசமான ஃபார்ம் மீது விமர்சனத்தை முன் வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது கேப்டன்சிக்கும் விமர்சனங்களை சந்திக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலேயே விளையாடியிருக்கலாம், ரோகித் வீட்டிலிருந்திருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் பேச்சு. ரோகித் கேப்டனாக இருக்கும்போது அணிக்கு சுறுசுறுப்பு இல்லை என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸி அணியானது தற்போது வரையில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும், நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்னிலும், மார்னஸ் லபுஷேன் 64 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தற்போது டிராவிஸ் ஹெட் 53 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 2 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

undefined

பவுலிங்கைப் பொறுத்த வரையில் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார். நிதிஷ் ரெட்டி ஒரு விக்கெட் கைப்பற்றினார். முதல் நாளில் அடிலெய்டு ஜாம்பவான் ஆன ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்த ரோகித் சர்மா இன்றைய 2ஆவது நாளில் 6 ஓவர்கள் கொடுத்திருக்கிறார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் பார்ம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

click me!