1,6,6,4,4,6.. ஒரே ஓவரில் ஸ்கோரை தாறுமாறா உயர்த்திய ரோஹித்.. ஹிட்மேன் அதிரடி அரைசதம்.. இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம்

Published : Jan 29, 2020, 01:11 PM IST
1,6,6,4,4,6.. ஒரே ஓவரில் ஸ்கோரை தாறுமாறா உயர்த்திய ரோஹித்.. ஹிட்மேன் அதிரடி அரைசதம்.. இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம்

சுருக்கம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் 23 பந்தில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்துவிட்டார். ரோஹித்தும் ராகுலும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.   

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடிவருகின்றனர். ராகுல் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, ரோஹித் சர்மா ஓவர் அதிரடியாக ஆடாமல் நிதானமாக ஆடிவந்தார். 5 ஓவரில் இந்திய அணி 42 ரன்கள் அடித்திருந்தது. 

இந்நிலையில், பவர்ப்ளேவின் கடைசி ஓவரான 6வது ஓவரை பென்னெட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் சிங்கிள் எடுக்க, அதன்பின்னர் பேட்டிங் முனைக்கு சென்ற ரோஹித் சர்மா, அந்த ஓவரை டார்கெட் செய்து விளாசி தள்ளினார். 2 மற்றும் 3வது பந்துகளில் சிக்ஸர்கள் விளாசிய ரோஹித், அடுத்த இரண்டு பந்தில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசி அணியின் ஸ்கோரை 69 ரன்கள் ஆக்கியதுடன் 23வது பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். 

ரோஹித்தும் ராகுலும் தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகின்றனர். இருவருமே அதிரடியாக ஆடிவருவதால் இந்திய அணி மெகா ஸ்கோரை அடிப்பது உறுதி. 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!