தாதாவையே தூக்கி அடித்த ஹிட்மேன்.. தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Jun 6, 2019, 12:47 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அடித்த சதத்தின் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா.
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அடித்த சதத்தின் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் அடித்தது. 228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அபாரமான சதமடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்துகள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. அதனால் பேட்டிங் ஆடுவதற்கு சற்று கடினமாக இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. போட்டியின் சூழல், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை நன்கு அறிந்த ரோஹித் சர்மா, இலக்கு எளிதுதான் என்பதால் அவசரப்படாமல் நிதானமாக நின்று ஆடினார். சதமடித்த ரோஹித் சர்மா, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 

கடந்த சில போட்டிகளாக சரியாக ஆடாமல், அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த ரோஹித் சர்மாவுக்கு இந்த போட்டி சரியான வாய்ப்பாக அமைந்தது. மீண்டும் ஃபார்முக்கு வந்தார் ரோஹித். ரோஹித் ஃபார்முக்கு திரும்புவது அணிக்கு அவசியமான ஒன்று. சரியான நேரத்தில் ரோஹித் ஃபார்முக்கு வந்துள்ளார். 

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா அடித்தது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 23வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத்தள்ளி மூன்றாமிடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. கங்குலி 22 சதங்கள் அடித்துள்ளார். ஏற்கனவே கங்குலியை சமன் செய்திருந்த ரோஹித், நேற்று அடித்த சதத்தின் மூலம் கங்குலியை பின்னுக்குத்தள்ளி மூன்றாமிடத்தை பிடித்தார். 

இந்த பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 41 சதங்களுடன் விராட் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் 23 சதங்களுடன் உள்ளார் ரோஹித். 
 

click me!