கிப்ஸுக்கு செம பதிலடி.. தென்னாப்பிரிக்காவை இரக்கமே இல்லாமல் கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Jun 6, 2019, 12:06 PM IST
Highlights

இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டுடன் இந்த உலக கோப்பையில் ஆடுகிறது என்ற கருத்தை அனைத்து முன்னாள் ஜாம்பவான்களும் தெரிவித்திருந்தனர். அது உண்மையும் கூட. தாங்கள் சிறந்த பவுலிங் யூனிட் என்பதை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்கள் மீண்டும் நிரூபித்தனர். சிறந்த பவுலிங் யூனிட் என்ற பொதுக்கருத்தை நியாயப்படுத்தினர்.
 

சவுத்தாம்ப்டனில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடியை நிலைக்கவிடாமல் ஆரம்பத்திலேயே பும்ரா வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் டுபிளெசிஸும் வாண்டெர் டசனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க, அதை உடைத்து பிரேக் கொடுத்தார் சாஹல்.

வாண்டெர் டசனை 22 ரன்களிலும் அதே ஓவரில் டுபிளெசிஸை 38 ரன்களிலும் வீழ்த்தி, இந்திய அணியை ஆட்டத்துக்குள் கொண்டுவந்தார் சாஹல். அதன்பின்னர் தென்னாப்பிரிக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முயலும்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்தார் சாஹல். 8வது விக்கெட்டுக்கு மோரிஸும் ரபாடாவும் இணைந்து சிறப்பாக ஆடி 66 ரன்களை சேர்த்ததன் விளைவாக தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டுடன் இந்த உலக கோப்பையில் ஆடுகிறது என்ற கருத்தை அனைத்து முன்னாள் ஜாம்பவான்களும் தெரிவித்திருந்தனர். அது உண்மையும் கூட. தாங்கள் சிறந்த பவுலிங் யூனிட் என்பதை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்கள் மீண்டும் நிரூபித்தனர். சிறந்த பவுலிங் யூனிட் என்ற பொதுக்கருத்தை நியாயப்படுத்தினர்.

வெறும் 228 ரன்கள் தான் இலக்கு என்பதால், அவசரப்படாமல் நிதானமாக கண்டிஷனை அறிந்து அதற்கேற்ப ஆடினார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது. அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்று உலக கோப்பை தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

இதற்கிடையே, இந்த போட்டி குறித்து கருத்து பதிவிட்ட தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கிப்ஸ், தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வேண்டுமென்றால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். 

அதற்கு செம நக்கலாக பதிலளித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்று கிப்ஸ் சொன்னதற்கு, அப்படியென்றால் தென்னாப்பிரிக்க அணி இரண்டு முறை பேட்டிங் ஆட வேண்டும் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியால் கண்டிப்பாக இந்திய அணிக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாது என்பதை பயங்கரமாக கலாய்த்து சுட்டிக்காட்டினார் சோப்ரா. 

Might have to bat twice 🙈 https://t.co/nhrJsVHLXN

— Aakash Chopra (@cricketaakash)
click me!