அவங்க 2 பேரோட பேட்டிங்கையும் ரொம்ப விரும்பி பார்ப்பேன்.! ரோஹித் சர்மா ஓபன் டாக்.. 2 பேருமே வெளிநாட்டு வீரர்கள்

Published : Jun 14, 2020, 09:09 PM IST
அவங்க 2 பேரோட பேட்டிங்கையும் ரொம்ப விரும்பி பார்ப்பேன்.! ரோஹித் சர்மா ஓபன் டாக்.. 2 பேருமே வெளிநாட்டு வீரர்கள்

சுருக்கம்

ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்த சமகால 2 கிரிக்கெட் வீரர்கள் யாரென்று பார்ப்போம்.  

இந்திய அணியின் துணை கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ரோஹித் சர்மா, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்துவருகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பல அசாத்திய சாதனைகளை படைத்துவருகிறார். ஒருநாள் போட்டிகளில் 264 ரன்கள் என்ற அசாத்திய அதிகபட்ச ஸ்கோர், ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள்(5 சதங்கள் - 2019 உலக கோப்பை) ஆகிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரோஹித் சர்மா. 

மிகப்பெரிய இன்னிங்ஸ்களை அசால்ட்டாக ஆடும் ரோஹித் சர்மா, அரைசதங்களை சதமாகவும், சதங்களை இரட்டை சதமாகவும் மாற்றுவதில் கைதேர்ந்தவர். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, சமகால கிரிக்கெட்டில் யாருடைய பேட்டிங்கை ரசித்து பார்ப்பார் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜேசன் ராய் என பதிலளித்தார். 

சமகால கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகரான சிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக ஸ்மித் திகழ்கிறார். வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்ட ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் 7 இன்னிங்ஸில் 774 ரன்களை குவித்து அசத்தினார். 

இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் அதிரடி தொடக்க வீரர். 2019 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி, கோப்பையை வெல்ல முக்கியமான காரணங்களில் ஒருவராக ராயும் திகழ்ந்தார். 
 

PREV
click me!

Recommended Stories

IND vs ENG: டி20 வரலாற்றில் இந்தியாவுக்கு அவமானம்! 4-0 என ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து வரலாற்று சாதனை!
Ind vs Engl: Team India: அந்த 3 பேருக்கும் கல்தாவா? கடைசிப் போட்டியில் அதிரடி மாற்றங்கள்!