கம்பீர், கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா தான்.. ஹிட்மேனின் அபாரமான சாதனை

Published : Oct 24, 2019, 01:42 PM IST
கம்பீர், கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா தான்.. ஹிட்மேனின் அபாரமான சாதனை

சுருக்கம்

ரோஹித் சர்மா டெஸ்ட் தரவரிசையில் 10வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.   

டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார் ரோஹித் சர்மா. 

தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா, ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த தொடரில் மொத்தமாக 529 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் ரோஹித். 

தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக டெஸ்ட் தரவரிசையில் 54வது இடத்தில் இருந்த, இந்த தொடர் முடியும்போது 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் 44 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. 

இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும், ஐசிசி தரவரிசையில் டாப் 10க்குள் இடம்பிடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். முன்னாள் வீரர் கம்பீர் மூன்றுவிதமான போட்டிகளிலும் டாப் 10 இடங்களுக்குள் இருந்திருக்கிறார். விராட் கோலி ஏற்கனவே மூன்றுவிதமான தரவரிசைகளிலும் டாப் 10க்குள் இருக்கிறார். தற்போது இந்த பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!