டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா

Published : Feb 24, 2022, 08:26 PM IST
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.  

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை, ரோஹித் சர்மா, விராட் கோலி, மார்டின் கப்டில் ஆகிய மூவரும் மாறி மாறி பிடித்துவருகின்றனர். இவர்கள் மூவருக்கும் இடையே அந்த முதலிடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

112 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3299 ரன்களை குவித்த மார்டின் கப்டில் முதலிடத்திலும், 97 போட்டிகளில் ஆடி 3296 ரன்களை குவித்த விராட் கோலி இரண்டாமிடத்திலும் இருந்தனர். ரோஹித் சர்மா 3ம் இடத்தில் இருந்தார்.

இலங்கைக்கு எதிராக லக்னோவில் நடந்துவரும் முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 32 பந்தில் 44 ரன்கள் அடித்தார். அதன்விளைவாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை (3307 ரன்கள்) குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மார்டின் கப்டிலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோஹித். 123 போட்டிகளில் ரோஹித் இந்த ஸ்கோரை அடித்துள்ளார்.

மார்டின் கப்டில் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே சமகாலத்தில்  ஆடிவருவதால், இந்த பட்டியலில் முதலிடம் கைமாறிக்கொண்டே இருக்கும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!