ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா விளையாடினர். இதில், ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து வெளியேறிய நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யக்மார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், 4-1 என்று தொடரை கைப்பற்றினார்.
David Warner Test Cricket Retirement: மனைவி தான் என்னுடைய உலகமே – டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!
இதே போன்று தென் ஆப்பிரிக்காவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், 1-1 என்று டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து ஒருநாள் தொடருக்கு பிறகு ஒருநாள் தொடர்களில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்ட ரோகித் சர்மாவிற்கு பதிலாக கேஎல் ராகுல் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியது.
T20 World Cup 2024: இந்தியா விளையாடும் போட்டி மட்டும் அமெரிக்காவில் நடத்தப்பட காரணம் என்ன தெரியுமா?
பின்னர் நடந்த டெஸ்ட் தொடருக்கு மட்டுமே ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் தான் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக வரும் ஆப்கானிஸ்தான் எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மறுபடியும் விளையாட இருக்கின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணி வரும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். இந்த தொடர் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரையில் 148 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா, 3853 ரன்களும், 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 118 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.