விமர்சித்த வாய்களை பேட்டிங்கால் அடக்கிய தவான்!! இந்திய அணி அபார தொடக்கம்

By karthikeyan VFirst Published Mar 10, 2019, 2:57 PM IST
Highlights

தவான் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது அணி நிர்வாகம் அதீத நம்பிக்கை வைத்திருந்தது. அவர் சரியாக ஆடாவிட்டாலும் இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தி என்று பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்திருந்தார். 
 

கடந்த போட்டியில் ஒரு ரன் அடிக்கவே திணறிய தவான், மொஹாலியில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்து ஆடிவருகிறார். 

இந்திய அணியின் நிரந்தர தொடக்க ஜோடியாக திகழும் ரோஹித் - தவான் ஜோடி இந்திய அணிக்கு பல சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்திருக்கின்றனர். இருவரும் இணைந்து பல மைல்கற்களை எட்டிவருகின்றனர். இதற்கிடையே உலக கோப்பை நெருங்கிய நிலையில், தவான் ஃபார்மில்லாமல் தவித்துவந்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார். அதிலும் ராஞ்சியில் நடந்த மூன்றாவது போட்டியில் முதல் ரன்னை அடிக்கவே திணறிய தவான், ஒரே ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தவானை பென்ச்சில் உட்கார வைத்துவிட்டு ரோஹித்துடன் ராகுலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

தவான் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது அணி நிர்வாகம் அதீத நம்பிக்கை வைத்திருந்தது. அவர் சரியாக ஆடாவிட்டாலும் இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தி என்று பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தன் மீதான நம்பிக்கையை காப்பாற்றினார் தவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்துவரும் நான்காவது ஒருநாள் போட்டியில் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறார். பவுண்டரிகளாக விளாசிய தவான், அரைசதம் கடந்து ஆடிவருகிறார். ரோஹித் சர்மாவும் சிறப்பாக ஆடிவருகிறார். ரோஹித் - தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து ஆடிவருகிறது. 

தவான் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிவருகிறார். அவரது ஃபார்மை திரும்பப்பெற ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும் என்று நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் நாம் எழுதியிருந்தோம். அந்த வகையில் தவான் இந்த போட்டியில் சிறப்பாக ஆடி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றியதோடு, தனது திறமையையும் அணியில் தனது முக்கியத்துவத்தையும் நிரூபித்துள்ளார். ரோஹித் சர்மாவும் அரைசதம் அடித்துவிட்டார். ரோஹித் - தவான் இருவரும் அரைசதம் கடந்து அபாரமாக ஆடிவருகின்றனர். 
 

click me!